'ஆஷா நிகேதனின் நண்பர்கள்' நிதி திரட்டும் விருந்து
செப்டம்பர் 30, 2009 அன்று ஆஷா நிகேதனின் நண்பர்கள் (Friends of Asha Niketan) அமைப்பு தனது வருடாந்திர நிதி திரட்டும் விருந்தை நியூயார்க், ப்ரூக்லினில் உள்ள ரெக்ஸ் மேனரில் நடத்தியது. முன்னெப்போதுமில்லாத எண்ணிக்கையில் 235 புரவலர்கள் கலந்துகொண்டனர்.

திருமதி. ரங்கநாயகி ஸ்ரீனிவாசன் பாடிய விநாயகர் துதியுடன் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் ஒரு நிர்வாக இயக்குனர், ஒரு சமூக சேவகர், ஒரு மருத்துவர் ஆகியோர் செய்த மனிதநலப் பணிகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். திருமதி. சீதாதேவி வீணை வாசித்தார்.

இந்த லாபநோக்கற்ற அமைப்பு, இந்தியாவில் மூளை வளர்ச்சி குன்றியோரின் நலனுக்காகச் செயல்படும் ஆஷாநிகேதன் இல்லங்களுக்கு உதவுவதற்கான நிதியைத் திரட்டி அளிக்கிறது.

வரிவிலக்குப் பெறத் தகுதியுள்ள நன்கொடைகளை இங்கே அனுப்பலாம்:

Friends of Asha Niketan
P.O.Box 182 Candlewood Isle
New Fairfield Ct 06812

உஷா வெங்கடராகவன்,
கனெக்டிகட்.

© TamilOnline.com