தென்கலிஃபோர்னியா தமிழ்மன்றம் வழங்கும் நகைச்சுவை நாடகம்
நவம்பர் 7, 2009 அன்று மாலை 5:30 மணிக்கு சான் டியேகோவைச் சேர்ந்த 'வானவில்' நாடகக் குழுவினர் வழங்கும் 'காதல்! காதல்!! காதல்!!!' என்னும் நகைச்சுவை நாடகத்தைத் தென்கலிஃபோர்னியா தமிழ் மன்றம் வழங்குகிறது. ஷ்யாம் சுந்தர் அவர்கள் எழுதி இயக்கிய இந்த நாடகம் ஹூவர் நடுநிலைப் பள்ளி அரங்கத்தில் (Hoover Middle School Auditorium, 3501, Country Club Dr., Lakewood CA-90712) நடைபெறும். இந்நாடகம் முன்னரே சான் டியேகோ தமிழ்ச் சங்கம் வழியே மேடையேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமது பெற்றோர்களிடம் திருமணத்துக்குச் சம்மதம் பெறக் காதலனின் நண்பர்கள் செய்யும் அசட்டுத்தனமான திட்டமே 'காதல்! காதல்!! காதல்!!!' நாடகத்தின் மையக்கரு. இயக்குனர் ஷ்யாம் சுந்தர், "இசையமைப்பு, அரங்க நிர்வாகம், ஒலி மற்றும் ஒளி அமைப்பு போன்றவைகளில் மிகுந்த கவனம் செலுத்தி இருக்கிறோம். இதில் பேசப்படும் பலவிதத் தமிழ் பாணிகள் நாடகத்துக்குச் சுவை கூட்டுகின்றன. தமிழ் சினிமாக்களில் மட்டுமே பார்க்கக் கூடிய ஒரு விஷயத்தை இதில் புகுத்தியிருக்கிறோம், என்னவென்று பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்" என்று கூறுகிறார்.

தென்கலிபோர்னியா தமிழ் மன்ற நிர்வாகிகளான ஹரி, வெங்கட், நாராயணன், ஸ்ரீராம் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.

நுழைவுச் சீட்டு வாங்க: sulekha.com
கட்டணம்: $10, $20, $50 (ஒரு குடும்பத்திற்கு)
தொடர்பிற்கு: socal-tamil-manram@yahoo.com
தொலைபேசி: 562-653-6120

அனு ஸ்ரீராம்,
இர்வைன், கலிபோர்னியா

© TamilOnline.com