இனிது இனிது
இயக்குனர் சரணின் சகோதரரும், பிரபல ஒளிப்பதிவாளருமான குகன் இயக்கும் முதல் படம் இனிது இனிது. தெலுங்கில் மிகப் பெ‌ரிய வெற்றி பெற்ற 'ஹேப்பிடேஸ்' படம் தான் தமிழில் இனிது இனிதாக வெளியாக இருக்கிறது. பிரகாஷ்ரா‌ஜின் டூயட் மூவிஸ் இப்படத்தைத் தயா‌ரித்துள்ளது. கல்லூரி சம்பந்தப்பட்ட கதையான இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால‌ஜியில் நடத்தப்பட்டது. ஹேப்பிடேஸுக்கு இசையமைத்த மிக்கி ஜே. மேயரே இதற்கும் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com