விரிகுடாப் பகுதியில் 'சூழல் தினம்'
நவம்பர் 1, 2009 ஞாயிறு மதியம் 2:30 மணிக்கு சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 'இயற்கை தினம்' (Eco Day) ஒன்றை 'அமிர்த பால கேந்திரா', 'காமன் விஷன்', 'க்ரீன் ஃபிரண்ட்ஸ்' ஆகிய அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. நடைபெறும் இடம்: M.A. Center, 10200 Crow Canyon Road, Castro Valley, CA 94552.

மரம் நடுவதால் இயற்கைக்குச் செய்யும் நற்பலன்களைக் குழந்தைகள் அறிய இந்த நிகழ்ச்சி உதவும். அப்போது, வல்லுனர்களின் மேற்பார்வையில் குழந்தைகளூக்கு மரம் நட வாய்ப்புத் தருவதோடு, மரங்கள் மற்றும் இயற்கை குறித்துக் கேள்வி கேட்டுத் தெளிவு பெறலாம்.

நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

மேலும் விபரங்களுக்கு:
தொலைபேசி - 925.398.0632
இணையதளம்: ecoday.eventbrite.com

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com