சூரிய ஊறுகாய்
தேவையான பொருட்கள்
தக்காளி - 2 கிலோ
ஊறுகாய்ப் பொடி - 1 1/2 கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
வெந்தயக் கீரை (மேதி) பவுடர் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - 1 தேக்கரண்டி

செய்முறை
தக்காளியை வெட்டி, உப்பு, புளி சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குலுக்கவும். இரண்டு நாட்கள் சென்று தக்காளியைப் பிழிந்து தட்டில் போட்டு, தக்காளியையும், தண்ணீரையும் தனித்தனியாக வெயிலில் உலர்த்தவும். இரண்டும் நன்றாகக் காய வேண்டும். தினமும் பிழிந்தெடுத்த தக்காளிக் கலவையை மறுபடியும் தண்ணீரில் போட்டு குலுக்கி வைக்கவும். மறுநாள் தனித்தனியாக உலர்த்தவும். நான்கு நாள்கள் அல்லது ஒரு வாரத்தில் நன்கு உலர்ந்து விடும். இரண்டையும் சேர்த்து மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.

அடிப்புறம் அகலமான ஒரு பாத்திரத்தில் அந்தக் கலவையை நாலாபுறமும் அணைகட்டினாற்போல் வைத்து நடுவில் குழியாக வைத்துக் கொள்ளவும். அதில் காரப்பொடி, மஞ்சள் தூள், பெருங்காயம் இவற்றைக் கலந்து போட்டு, எண்ணெயை நன்கு காய்ச்சி கடுகை வெடிக்கச் செய்து அந்தக் குழியில் உள்ள கலவையில் கொட்டி நன்றாக மூடுமாறு மேலே ஒரு பாத்திரம் அல்லது கண்ணாடி மூடியால் இடைவெளியின்றி மூடவும். நன்றாக ஆறியபின் கலந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். சாதம் பிசைய, இட்லி, சப்பாத்தி என அனைத்துக்கும் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது. வெளியில் இருந்தாலும் கெட்டுப் போகாது. தனியாக சிறிதளவு எடுத்து வைத்துக் கொண்டு மீதியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.

ஜயலக்ஷ்மி சேஷாத்ரி,
கனெக்டிகட்

© TamilOnline.com