மோதல்கள்
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. தி.மு.க.வும் 107 தொகுதிகளிலும் காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் நேரடியாக அ.தி.மு.க.வுடன் மோதுகின்றன. 16 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக ம.தி.மு.க.வுடன் மோதுகின்றது.

நடிகர் விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிட கழகம் பல தொகுதிகளில் ஓட்டுகளைப் பிரிக்கக்கூடிய சக்தியாக நிலவுகிறது. விஜயகாந்த் அதிகத் தொகுதி களைக் கைப்பற்றாவிட்டாலும் பல தொகுதி களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பார் என்று கூறப்படுகிறது. தவிர, பார்வர்டு பிளாக் மற்றும் பாரதிய ஜனதா கட்சி போன்றவை தேர்தலைத் தனித்தே சந்திக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் சுலபமாக 40 தொகுதிகளை கைப்பற்றியது போல், சட்டப் பேரவைத் தேர்தலில் பெருவாரியான இடத்தைக் கைப்பற்றிவிடுவோம் என்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் நினைக்க முடியாது. பல தொகுதிகளில் கடும்போட்டி நிலவும். அரசுக் கட்டில் ஏறுவது யார் என்பது மே 11-ம் தேதி மதியத்துக்குள் தெரிந்துவிடும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com