விஜயின் ஐம்பதாவது படம்
'வேட்டைக்காரன்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படம் 'உரிமைக்குரல்'. இது அவரது 50வது படம். படத்தைச் சங்கிலிமுருகன் தயாரிக்கிறார். எஸ்பி ராஜ்குமார் இயக்குகிறார். பசுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசை, மணி சர்மா. எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் கலை இயக்குநர். கதாநாயகியாக இலியானா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரவிந்த்

© TamilOnline.com