தமிழ்த் திரைப்படத்தில் மலையாள மது
கால் நூற்றாண்டுக்கு முன் மலையாளத்தில் சக்கைப் போடுபோட்ட 'செம்மீன்' படத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் மது, மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். சில தமிழ்ப் படங்களில் நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் 'தர்மதுரை' இவர் நடித்து வெளி வந்த கடைசித் தமிழ் படம். இப்போது மது மீண்டும் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க விருக்கிறார். படத்தின் பெயர் 'ஒரு பொண்ணு ஒரு பையன்'

கேடிஸ்ரீ

© TamilOnline.com