விழியில்லாவிட்டாலும்...
'முதல் முதலாய்..' என்கிற படத்திற்காக ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் கோமகன் என்ற இளைஞர். இவருக்குக் கண்பார்வை கிடையாது! கோமகன் எம்.ஏ. பட்டதாரி. சேரன் இயக்கத்தில் வெளிவந்த 'ஆட்டோ கிராப்' படத்தில் பாடிய கோமகன், ''2002-ல் திரைப்பட இயக்குநர் சேரன் தனது ஆட்டோகிராப் படத்தில் பாடச்செய்து வெளி உலகுக்கு என்னையும் என் குழுவையும் அடையாளம் காட்டினார். அப்பாடலுக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததன் மூலம் எங்கள் குழுவுக்கு அங்கீகாரம் கிடைத்தது'' என்று நினைவுகூர்கிறார். படத்தை இயக்குகிறார் பெஞ்சமின். கோமகன் இசையமைக்கும் பாடல்களை இயற்றியவர் கவிஞர் கவிமுகில். இதன் ஐந்து பாடல்களை கார்த்திக், ஹரிச்சரண், கிரேஸ் கருணாஸ், கோமகன் குழுவினர் மற்றும் அனுராதா ஸ்ரீராம், டிப்பு ஆகியோர் பாடியுள்ளனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com