'ரன்வே'யில் பிரசாந்த்
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'ரன்வே' தமிழில் தயாராகிறது. மலையாளப் படத்தில் திலீப் நடித்த வேடத்தில் தமிழில் பிரசாந்த் நடிக்கவிருக்கிறார். நாயகியாகப் புதுமுகம் ஒருவர் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலு, ரியாஸ்கான், வையாபுரி ஆகியோரும் நடிக்கின்றனர். யுனிவர்சல் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைக்கிறார். திரைக்கதை, வசனம், இயக்கம் ரமேஷ் டி.எஸ்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com