மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி வட அமெரிக்க விஜயம்
2009 ஜூலை மாதத்தில், ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி கோரல்வில்-அயோவா, சிகாகோ, நியூயார்க், வாஷிங்டன் டி.சி., பாஸ்டன், டொரன்டோ (கனடா) ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமான அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து, தமது அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனை மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன. ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக/தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெற்றன.

அம்மாவின் அமுத மொழிகளில் சில:

"இறைவனிடம் காட்டும் பக்தி என்பது, அனைத்து உயிரினங்களிடமும் நாம் காட்டும் அன்பாகும். இதல்லாமல் வெறும் பிராத்தனை மட்டும் செய்வது பக்தியல்ல. இறைவன் ஆகாயத்திற்கு அப்பால் இருப்பவரல்ல. நம் எல்லோருடைய உள்ளத்தின் உள்ளேயும் அவர் வசிக்கிறார். இந்த மனோபாவத்தை நாம் வளர்க்க வேண்டும். அதற்குப் பணிவு மிகவும் அவசியம். இதற்காக நாம் ஒரு பெரிய தியாகம் செய்ய வேண்டும் - அது அகம்பாவத் தியாகம். இந்த அகம்பாவமே அனைத்திற்கும் தடையாக இருக்கிறது. இதைத் துறப்பதன் மூலம் நாம் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்."

மனித மேம்பாட்டுக்காக அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் எண்ணற்றவை. அவற்றைப் பற்றி அறிய: www.amritapuri.org/activity

மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com