சிகாகோவில் ஸ்ரீ மஹா ருத்ரம்

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Chandra Sekar, Chicago


2009 அக்டோபர் 2-4 தேதிகளில் உலகநலம் மற்றும் அமைதிக்காக ஸ்ரீ மஹாருத்ர ஹோமம் ஒன்றை சிகாகோ புறநகர் வில்லோப்ரூக் சின்மயா மிஷன் பத்ரி ஆஸ்ரமத்தில் நடத்த உள்ளனர். இந்த ஹோமம் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 75வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிகள் பின்வருமாறு நடைபெறும்:

அக்டோபர்
2 - கணபதி ஹோமம், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை.
3 - மஹன்யாஸ ஜபம், சிவலிங்கம், ஸ்ரீ குரு பாதுகைகளுக்கு அபிஷேகம், ருத்ர அர்ச்சனை; குழந்தைகள் ஸ்லோகம் சொல்லுதல், ஆன்மீக உரை.
4 - ஸ்ரீ ருத்ர ஹோமம், வைதீகர்களை கௌரவித்தல்

பக்தர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று இறையருள் பெறும்படி விழாக்குழுவினர் கேட்டுக் கொள்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு:
இணைய தளம்: www.maharudram.net
மின்னஞ்சல்: info@maharudram.net
தொலைபேசி: 847-885-2790© TamilOnline.com