இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் நூலகம்
உலகின் இரண்டாது மற்றும் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் நூலக மையம், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துவங்கப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன் இதைத் திறந்து வைத்தார். இதற்காக சிங்கப்பூர் ஆசிய ஊடகத் தகவல் மற்றும் தொடர்பியல் மையத்தின் (Asian Media Information and Communication Centre) கிளைப் பிரிவு பல்கலைக் கழக தொடர்பியல் துறையில் அமைக்கப்பட்டுள்ளது. AMIC மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் தொடர்பியல் துறைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஓப்பந்தத்தின் விளைவாக இச்செயற்கைக் கோள் நூலக மையம் உருவாக்கப்பட்டுள்ளது. எண்ணற்ற ஆய்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இத்திட்டம் மிகுந்த பயனளிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com