"இவர் ஒரு தமிழர்" என்று சொல்ல வேண்டும் போல...
சென்ற ஆண்டு பீஹாரில் உள்ள புத்த கயாவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள பிரம்மாண்டமான புத்தர் சிலையை வடித்தவர் திரு. கணபதி ஸ்தபதி என்ற கல்வெட்டைப் படித்தபோது, மொழி தெரியாத அந்த ஊரில் அனைவரையும் கூப்பிட்டு “இவர் ஒரு தமிழர்” என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது.

இந்த புத்தர் சிலையைப் பற்றி ஒரு சுவையான தகவல். ஜப்பான் அரசாங்கம் இரண்டு புத்தர் சிலைகளைக் கருங்கல்லில் வடிவமைக்க வேண்டும், ஒன்று ஜப்பானிலும் மற்றொன்று புத்த கயாவிலும் நிறுவப்பட வேண்டும் என்று முடிவு செய்தது. ஆனால் அவ்வளவு கனமான கருங்கல் சிலை, அதுவும் உள்ளீடற்றதாக (hollow) செய்வதற்கு அவர்களுக்குத் தயக்கம். எனவே கருங்கல் சிலைகள் வடிவமைப்பவர்கள் இந்தியாவில்தான் உள்ளனர் என்று கருதி பிரதமர் இந்திரா காந்தி அவர்களை அணுகினார்கள். அவரோ தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவன செய்யும்படி கூறியுள்ளார். அவர், கணபதி ஸ்தபதி அவர்களைத் தேர்ந்தெடுத்து, உடனடியாக ஜப்பானுக்குச் செல்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, ஸ்தபதியார் அங்கே சென்று, அவரால் வடிவமைக்கப்பட்ட சிலைதான் புத்த கயாவில் உள்ள புத்தர் சிலை. மற்றொன்று ஜப்பானில் உள்ளது.

இராஜலட்சுமி இராமநாராயணன்,
டென்வர், கொலராடோ

© TamilOnline.com