கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
ஜே.எஸ். 24 ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜே. செந்தில்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'. இதில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 'கற்றது தமிழ்' நாயகி அஞ்சலி நடிக்கிறார். இவர்களுடன் சரவணன், வெண்ணிறஆடை மூர்த்தி, கஞ்சா கருப்பு, சண்முகராஜன், நந்தா சரவணன், சரவண சுப்பையா, பாலாசிங், காதல் தண்டபாணி ஆகியோர் நடிக்கின்றனர். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இசை வித்யாசாகர். குமரி மாவட்டத்தில் நடந்த உண்மைக் கதைதான் படமாக எடுக்கப்படுகிறது என்பதால், படத்தின் வசனகர்த்தா பா. ராகவன் கதை நடந்த இடத்திற்கே சென்று குமரி மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கை அறிந்து, உணர்ந்து வசனமாக்கியிருக்கிறாராம். அந்தமான், லட்சத் தீவுகள், திருவண்ணாமலை, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இயக்கம் வடிவுடையான். அவரது இலட்சியப் படமாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com