மே 2006: குறுக்கெழுத்துபுதிர்
குறுக்காக

5. ஆனந்தச் சுதந்திரப் பாட்டு கொஞ்சம் குறைந்தாலும் சுமைதான் (2)
6. சிவாலய திட்டம் பாதி குலைந்தாலும் உயர்நோக்கில் உறுதியுடையவன் (6)
7. புறந்தள்ளு, எடுத்துவை (4)
8. மெத்தையான கல் முள் பாதையில் நதி (3)
9. அளவுக்குட்பட்ட அபிராமி காதலில் வீழ்ந்தாள் (3)
11. எட்டு வயதான அன்னம் (3)
13. செய்யுள் கலன் மாற்றிய சிறுவன் (4)
16. 14 நெடுக்கில் இருப்பதைத் தொடங்கும் அந்த பார் வேந்தன் முடிவில் குழம்பினான் (6)
17. வெட்டு, அதில் பாதித் துண்டை உடுத்து (2)

நெடுக்காக

1. இரண்டாம் சாளுக்கியனை புதைத்து மண்வெட்டியால் தோண்டு கொள்ளிவைப்பதற்கா? (4)
2. செல்வி அடைய விரும்பும் இடம் மலருதிர்ந்த பூமி (5)
3. துளி உருளைக்கிழங்கு தென்னமெரிக்க நாட்டுப் பருப்பில் வெந்தபண்டம் (3)
4. முதல் தேதியிலிருந்து ஏழுநாட்கள் சிவாலயத்தில் ஓதப்படும் (4)
10. பலருக்கு நாவுக்கெட்டியது வயிற்றுக்கெட்டாமல் குத்து படும் (3,2)
12. செய்து பார்த்து முன் தலை கிள்ளிய பயறு உருமாற்றம் (4)
14. தேக்கடி தம்பிரான் உள்ளேயிருந்து வெளியூருக்கு அனுப்பிய தகவல் (4)
15. மாணவர்க்குச் சோதனை ரதத்தோடு இறுதி முடிவு (3)

நீங்கள் புதிர் மன்னரா?

குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை மே 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@chennaionline.com. மே 25க்குப் பிறகு, விடைகளை http://thendral.chennaionline.com என்ற சுட்டியில் காணலாம்.


புதிர்மன்னர்கள்
சென்ற மாதம் புதிர்மன்னர்கள் யாரும் இல்லை.

புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத் துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.


ஏப்ரல் 2006 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 3. மதகு, 5. முதல்வன், 6. வினை, 7. பதில், 8. கவரிமான், 11. அம்பாலிகை, 12. அறுவை, 14. பாசி, 16. கவியமுது, 17. சுகம்
நெடுக்காக: 1. சமுத்திரம், 2. அல்லி, 3. மன்னவன், 4. குவி, 9. மாற்றுத்துணி, 10. கலி யுகம், 13. காயம், 15. சிசு

© TamilOnline.com