கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் ஆண்டு விழா
மே 17, 2009 ஞாயிறன்று, சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியருக்குத் தமிழ் பயிற்றுகின்ற கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், தனது ஆண்டு விழாவினைக் கொண்டாட இருக்கிறது. விழா கூபர்டினோ, டி அன்சா கல்லூரி வளாகத்திலுள்ள ஃப்ளிண்ட் மைய அரங்கத்தில் காலை 9:30 மணி முதல் மாலை 7:30 மணி வரை நடைபெறும்.

விழாவில் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் (தமிழ்ப் பீடத் தலைவர், UCB) மற்றும் திருமதி கௌசல்யா ஹார்ட் ஆகியோர் சிறப்புரையாற்ற இருக்கின்றனர். முனைவர் மு. பொன்னவைக்கோ (துணைவேந்தர், பாரதிதாசன் பல்கலைக்கழகம்) பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைக்கல்வி மையத்தை கலிபோர்னியா தமிழ்க் கழகத்தில் துவக்கி வைத்துச் சிறப்புரையாற்றுவார்.

விழாவில் தமிழ்க் கழகத்தின் கூபர்டினோ, எவர்கிரீன், ஃப்ரீமாண்ட், பிளெசண்டன் கிளை மாணாக்கர் பங்கு பெறுவர். தமிழ்க் கழகப் பள்ளியிறுதி வகுப்பை முடிக்கும் மாணவ, மாணவியருக்குப் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. இவர்களது கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் ஆகியனவும் நடைபெற உள்ளன.

மேலும் தொடர்புக்கு www.catamilacademy.org

லோகு வெங்கடாசலம் & டில்லி துரை

© TamilOnline.com