அஜீத்தின் அசல்
பில்லா, ஏகன் வெற்றிப்படங்களுக்குப் பிறகு அஜீத் நடிக்கும் புதிய படம் அசல். அஜீத்தின் நண்பரும், அவருடன் இணைந்து காதல் மன்னன், அமர்க்களம் போன்ற வெற்றிப் படங்களைத் தந்தவருமான சரண் இப்படத்தை இயக்குகிறார். சிவாஜி பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. அதிரடி ஆக்‌ஷன் படமான இதில் அஜீத்துக்கு இரட்டை வேடம். 'நம்பிக்கை துரோகத்துக்கு எதிராக வெடித்து கிளம்பும் ஒருவனின் கதை இது. டான், இண்டர்நேஷனல் சேஸிங்னு இப்படம் ரசிகர்களுக்கு ரொம்ப வித்யாசமாக இருக்கும்' என்கிறார் சரண். கிரீஸ், துருக்கி, இத்தாலி, துபாய், சிங்கப்பூர் என்று பல இடங்களில் படமாகப் போகும் இப்படத்திற்கு இசை: பரத்வாஜ்.

அரவிந்த்

© TamilOnline.com