கருணாஸ் நடிக்கும் அம்பாசமுத்திரத்து அம்பானி
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் திண்டுக்கல் சாரதி படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்து தன் திறமையை நிரூபித்த கருணாஸ், தற்போது 'அம்பாசமுத்திரத்து அம்பானி' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்தைத் தயா‌ரிப்பதும் அவரே. லாரன்ஸ் நடிக்கும் 'ராஜாதி ராஜா' படத்திற்கு தற்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் கருணாஸ், அதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இசை அமைக்க இருக்கிறார். கருணாஸின் படங்களுக்கு காமெடி ட்ராக் எழுதும் ராம்நாத்தான் படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com