கமல் நடிக்கும் ஆங்கிலப் படம் ‘19 ஸ்டெப்ஸ்'
‘தலைவன் இருக்கிறான்' படம் ‘உன்னைப் போல் ஒருவன்' என்ற பெயர் மாற்றப்பட்டிருக்கும் நிலையில் ‘19 ஸ்டெப்ஸ்' என்ற ஆங்கிலப் படம் ஒன்றிலும் கமல் நடிக்க இருக்கிறார். படத்தை ஏ.ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கிய பரத்பாலா இயக்குகிறார். சரித்திரக் கதையைக் கொண்ட இப்படத்தில் கேரளத்துக் குறுநில மன்னரின் மகளாக நடிக்கிறார் அசின். அவருக்குக் களரிச் சண்டை கற்றுக் கொடுக்கும் ஆசானாகக் கமல். இவர்களுடன் பிரபல ஜப்பானிய நடிகர் தடானாபோ அசானா களரி மாணவராக நடிக்கிறார். இசை: ஏ.ஆர். ரஹ்மான். ஜப்பானிய மொழியிலும் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ரஹ்மானுடன் இணைந்து ஜப்பானிய இசையமைப்பாளர் ஜொய் ஹிசய்ஜி இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com