லேக் கவுன்டி (இல்லினாய்ஸ்) தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 18, 2009 அன்று மாலை 4:00 மணி முதல் லேக் கவுன்டி தமிழ் அன்பர்கள் தமிழ்ப் புத்தாண்டு நாளை கிரேய்ஸ் லேக்கில் உள்ள லேக் கவுன்டி ஹிந்துக் கோவிலில் கொண்டாடுகிறார்கள். பெரியோர்களுக்கான ‘கேம் ஷோ', தமிழ்ச் சொல் விளையாட்டு, பேச்சுப் போட்டி, 3 முதல் 6 வயதுவரையுள்ள சிறாருக்கான ஆடையலங்கார அணிவகுப்பு ஆகியவை நிகழ்ச்சியில் இடம்பெறும்.

நிகழ்ச்சி தொடங்குமுன் சிற்றுண்டியும், இறுதியில் உணவும் உண்டு.

© TamilOnline.com