மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 15, 2009 அன்று மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா காந்தி மையத்தில் நடந்தது. முந்நூறுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. சங்கத் தலைவி சித்ரா சுப்ரமணியன் வரவேற்றுப் பேசினார். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் நிவேதா மதியழகன் மற்றும் ஸ்நேஹா பகவன்தாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். பல்வேறு ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அ, ஆ பாடல், ஜல்லிக்கட்டுப் பாடல் அருமையாக இருந்தன. 'தஞ்சாவூரு மண்ணெடுத்து' என்ற பாடலுக்கு தமிழ்த் தாயை உருவாக்குவது போல் நடனத்தை அமைந்திருந்தது வெகு சிறப்பு. திரு. கனிக்கண்ணன் தயாரித்த ‘அசத்தப் போவது நாங்க' நிகழ்ச்சியைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். 'நலமாய் வாழ அளவாய்ச் சாப்பிடணும்' நிகழ்ச்சியும், Jay Leno - David Letterman உரையாடலும் சிறப்பாக இருந்தது. இறுதி நிகழ்ச்சியாக இடம்பெற்ற பொற்செழியன் அவர்கள் இயக்கிய ‘நிகழ்காலக் கூத்து' அனைவரையும் கவர்ந்தது. ராஜ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

தாஸ் பலராமன்

© TamilOnline.com