நவ்தீப் சொல்லச் சொல்ல இனிக்கும்
இளம் நடிகர்களில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்டவர் நவ்தீப். அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'சொல்லச் சொல்ல இனிக்கும்'. படத்தில் முக்கியமான வில்லனாகப் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். 'அறிந்தும் அறியாமலும்' படத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது. எம் ஸ்டூடியோ சார்பாக அப்துல்லா இப்படத்தைத் தயாரிக்கிறார். இயக்கம்: முரளி அப்பாஸ். நவ்தீப்பிற்கு ஜோடியாக நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர் என்பது முக்கியமான விஷயம்.

அரவிந்த்

© TamilOnline.com