ரஞ்சித்தின் ‘ரயிலு’
வில்லன், கதாநாயகன், குணசித்திர நடிகர் எனப் பல வேடங்களில் நடித்துள்ள ரஞ்சித், தற்போது இயக்கி நடித்து வரும் படம் ‘ரயிலு'. இப்படத்தில் வினோத், யுவராணி, இளவரசு, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதாநாயகியாக புதுமுகம் கரோலின் நடிக்கிறார். கேரளாவின் பிரபல இயக்குநர் லோகிததாஸ் இயக்கிய 'சல்லாபம்' படத்தின் ரீமேக்தான் ரயிலு. வன்முறை, ஆபாசம், குத்துப்பாட்டு எதுவும் இல்லாமல் குடும்பத்தோடு அனைவரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாக்கியிருக்கிப்பதாகச் சொல்கிறார் இயக்குநர். கதை: லோகிததாஸ். இசை: பிரின்ஸ் நல்லதம்பி. பாடல்கள்: சினேகன், காதல்மதி. ஒளிப்பதிவு: சாலை சகாதேவன். தயாரிப்பு: வீ.கே.மீடியா விஷன்.

அரவிந்த்

© TamilOnline.com