தனுஷ் ஆடும் ஆடுகளம்
படிக்காதவன் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படம் ஆடுகளம். படத்தை இயக்குபவர் தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்' படத்தின் இயக்குநர் வெற்றி மாறன். படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். தனுஷ்-த்ரிஷா இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் களம் மதுரை என்பதால் தனது அலுவலகத்தை மதுரைக்கு மாற்றியிருக்கிறார் வெற்றிமாறன். பேராசியரும், சொற்பொழிவாளருமான கு. ஞானசம்பந்தன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க இருக்கிறார். ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக த்ரிஷா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com