அமெரிக்கக் குறள்கள்
அறிவியல் பூங்கா அமெரிக்க மண்ணில்
அறிவதற் காயிரம் உண்டு.

வங்கிக் கணக்கில் கடைச்சரக்கு வாங்கிடத்
தங்கரத்தில் தாங்கார் பணம்.

இந்நாட்டார் என்றுரைக்க ஓரிருவர் தானிருக்கப்
பன்னாட்டார் வாழும் தலம்.

மரக்கட்டை வீடுகளால் ஆன அமெரிக்கா
தரத்தால் உயர்ந்தது தான்.

அருண் சின்னையா,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com