கணிதப் புதிர்கள்
1. 6729, 13458 இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்ன?

2. 17, 4913 இந்த இரு எண்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகள் என்ன?

3. வித்யாவிடம் இருந்த சாக்லேட்டுகளை எட்டு எட்டாகக் கூறு போட்டால் ஐந்து மீதம் வருகிறது. ஆறு ஆறாகக் கூறு போட்டால் மூன்று மீதம் வருகிறது. நான்கு நான்காகக் கூறு போட்டால் மீதம் ஒன்று வருகிறது. அப்படியென்றால் வித்யாவிடம் இருந்த சாக்லேட்டுகள் எவ்வளவு?

4. சேகர் தன் வீட்டில் சில கிளிகளையும், புறாக்களையும், நாய்களையும், பூனைகளையும் வளர்த்து வந்தார். அவரிடம் மொத்தம் எவ்வளவு வளர்ப்புப் பிராணிகள் உள்ளன எனக் கேட்டற்கு, அவை ஒவ்வொன்றும் எண்ணிக்கையில் சமம் என்றும், ஆனால் அவற்றின் கால்களின் மொத்த எண்ணிக்கை 96 என்றும் கூறினார். அப்படியென்றால் அவரிடம் உள்ள வளர்ப்பு மிருகங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

5. ஒரு மூன்று இலக்க எண்ணை எழுதவும். அதை 11ஆல் பெருக்கவும். பெருக்கி வந்ததை மீண்டும் 91ஆல் பெருக்கவும். வரும் விடையின் மூலம் தெரிவது என்ன?

விடைகள்

© TamilOnline.com