சித்ரா விவேக் இந்திய சமுதாய மையத்தின் புதிய நிர்வாக இயக்குனர்
திருமதி. சித்ரா விவேக் அவர்கள் இந்திய சமுதாய மையத்தின் (The India Community Center) புதிய நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருமதி. விவேக் 15 வருடங்களுக்கும் மேலாக வணிக நிர்வாகத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

சென்னையில் பிறந்து வளர்ந்த சித்ரா, 'இந்தியச் சமுதாய மையம் சிறப்பாகப் பணியாற்றி வரும் இந்த நேரத்தில் நான் அதன் வளர்ச்சியில் ஓர் அங்கமாக இருப்பதை நினைத்துப் பெருமை அடைகிறேன்' என்கிறார். மையத்தின் தலைவர் தலத் ஹஸன் 'சித்ராவின் நிர்வாகத் திறமை இந்த மையத்தை நிச்சயம் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். அவருடன் பணியாற்றுவதை மிக்க ஆர்வத்துடன் எதிர் நோக்குகிறேன்' என்றார்.

இந்தியச் சமுதாய மையம், அமெரிக்காவின் மிகப்பெரிய இந்திய-அமெரிக்கர் கூட்டமைப்பாகும். பாரத கலாசாரத்தையும், பண்பாட்டையும் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் மூலம் பரப்பி வருகிறது. நியூ மில்பிட்டாஸில் உள்ள இந்தியச் சமுதாய மையத்தின் கட்டிட விரிவாக்கப் பணிகள் விரைவிலேயே தொடங்க உள்ளன. 40000 சதுர அடி பரப்பில் வரப்போகும் இக்கட்டடத்தில் நூலகம், உடற்பயிற்சிக் கூடம், கணினி ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் இருக்கும். இருநூறுக்கும் மேற்பட்ட தொண்டர்களின் சேவையாலும், அலுவலக நிர்வாகிகளின் கூட்டு முயற்சியாலும் செயல்பட்டு வரும் இந்த மையம், உறுப்பினர்கள் வழங்கும் நிதி உதவியால் மட்டுமே இயங்கி வருகிறது. இது ஒரு லாப நோக்கற்ற, மதச்சார்பற்ற அமைப்பு.

மையத்தின் முகவரி:
ICC Milpitas: 555 Los Coches Street, Milpitas, CA 95035
ICC Sunnyvale: 285 N. Wolfe Road, Suite 102, Sunnyvale, CA 940

இணையதள முகவரி:
info@indiacc.org
www.indiacc.org

மேலும் விவரங்கள் பெறத் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 408.934.1130

© TamilOnline.com