சரவணன் நடிக்கும் 'பிஞ்சு மனசு'
மாறுபட்ட கதையம்சத்துடன், உணர்ச்சிகரமான வேடத்தில் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பிஞ்சு மனசு. இதில் தர்ஷா கதாநாயகியாக நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, ஆர்த்தி, பல்லவி, மாஸ்டர் தருண் உட்பட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் டி.ஜெய்ராம். சரவணன்-தர்ஷா தம்பதிக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பின் குழந்தை பிறக்கிறது. குழந்தையைத் தங்கள் உயிராகக் கருதி வளர்த்து வரும்போது, திடீரென அது காணாமல் போய்விடுகிறது. குழந்தையைக் கண்டுபிடிக்க தம்பதியர் மேற்கொள்ளும் உணர்ச்சிகரமான போராட்டங்கள்தான் படத்தின் கதை. இளங்கோ பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை - இந்தியன்

அரவிந்த்

© TamilOnline.com