'திருத்தணி'யில் பரத்
திருவண்ணாமலை படத்துக்குப் பிறகு பேரரசு இயக்கும் புதிய படம் திருத்தணி. இதில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். 'சுயநலமே தன்னுடைய கொள்கை என்றிருக்கும் ஒரு இளைஞனை எப்படிச் சமுதாயம் பொது நலனுக்குள் இழுக்கிறது' என்பதுதான் திருத்தணி படத்தின் கதையாம். தன் மீது கமர்ஷியல் முத்திரை விழுந்து விட்டதால் தொடர்ந்து கமர்ஷியல் படங்களையே எடுத்து வருவதாகவும், திருத்தணிக்குப் பிறகு தன்னிடமிருந்து வித்தியாசமான படங்களை எதிர்பார்க்கலாம் என்றும் பேரரசு கூறுகிறார். பரத்துக்கு ஜோடியாக புதுமுகம் சுகா நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com