எள்ளுப் பூரண சுகியன்
தேவையான பொருட்கள்
எள்ளு - 1/2 கிண்ணம்
தேங்காய் - 2 தேக்கரண்டி
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
வெல்லம் - 3/4 கிண்ணம்
மைதா மாவு - 1/4 கிண்ணம்
கோதுமை மாவு - 1/4 கிண்ணம்
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி

செய்முறை
எள்ளை வாணலியில் பொரித்து, மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். வெல்லத்தை 2 தேக்கரண்டி தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்துக் கரைந்ததும் எள்ளுப்பொடி, தேங்காய்த் துருவல் சேர்த்து, அரிசி மாவையும் போட்டுக் கெட்டியாகக் கிளறிக் கொள்ளவும். மைதா, கோதுமை மாவு இரண்டையும் ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து, தோசை மாவு பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும். எள்ளுப் பூரணத்தை நெய் விட்டுப் பிசைந்து, சிறு சிறு உருண்டையாக உருட்டி, மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் போட்டு நன்றாகப் பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும். மிதமான சூட்டில் பொரிப்பது நல்லது.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com