வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் தமிழ் மாதம், பொங்கல் விழா
இந்தியச் சமுதாய மையம் (ICC) மில்பிடஸ் உடன் இணைந்து வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் ஜனவரி மாதத்தைத் தமிழ் மாதமாகக் கொண்டாட இருக்கிறது. ஜனவரி மாதம் முழுதும் தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலை, விஞ்ஞான வளர்ச்சி போன்றவற்றை வெளிக் கொணரும் வகையில் இந்தியச் சமுதாய மையம் அலங்கரிக்கப்படும். தமிழ் அன்பர்கள் அனைவரும் இந்தியச் சமுதாய மையத்திற்கு வந்திருந்து இந்த அலங்காரக் காட்சிகளை கண்டு களிக்க வேண்டுகிறோம்.

ஜனவரி 11, 2009 ஞாயிறன்று பொங்கல் விழா இந்தியச் சமுதாய மையத்தில் கொண்டாடப்பட இருக்கிறது. அருமையான பொங்கல் உணவுடன் மதியம் பன்னிரண்டு மணிக்கு நிகழ்ச்சி துவங்கும். தமிழ் நாட்டின் வரலாற்றுப் பெருமைகளை வெளிக் கொணரும் வகையில் குறும்படம் ஒன்று திரையிடப்படும். அதைத் தொடர்ந்து சேர்ந்திசை, தெருக்கூத்து, நாட்டியம் என்று பல கலைநிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

ஜனவரி முதல் தமிழ் மன்றத்தில் புதிய செயற்குழு செயல்படத் துவங்குகிறது. இந்த நிகழ்ச்சி தமிழ் அன்பர்கள் புதிய செயற்குழு அங்கத்தினரைச் சந்தித்து அறிமுகம் செய்து கொள்ளவும், கடந்த ஆண்டு செயற்குழு அங்கத்தினருக்கு நன்றி கூறவும் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

தமிழ் மாத, மற்றும் பொங்கல் விழா கொண்டாட்டங்களுக்கு அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு www.bayareatamilmanram.org

© TamilOnline.com