அரவிந்த் நடிக்கும் தந்திரன்
ஸ்ரீ சரவணபவ மூவிஸ் பட நிறுவனம் சார்பில் விஜயலட்சுமி ராமமூர்த்தி தயாரிக்கும் படம் தந்திரன். இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் கே.ஜே.போஸ். வசனம் கவிஞர் ரதன் சந்திரசேகர். 'சென்னை -28' உட்பட பல படங்களில் நடித்து வரும் அரவிந்த், இப்படத்தில் கதாநாயகன். ஜோடி ஸ்வேதாமேனன். சித்திக், ஐஸ்வர்யா, வினாயகம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரபல மந்திரவாதி ஒருவரிடம் சிக்கிக் கொண்ட தனது காதலியைக் கதாநாயகன் எப்படி மீட்கிறான், அவளது சகோதரன் கதி என்ன ஆனது என்பதைக் காதல், ஆக்‌ஷன், மர்மம் கலந்து கூறும் படம்தான் தந்திரன். கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது பெற்ற வீ. தஷி இசையமைக்கிறார். பாடல்களை தாணு கார்த்திக், விஜய் கிருஷ்ணா, அமிர்தா ராமலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com