தலைவன் இருக்கிறான்
மர்மயோகி படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனதால் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் சார்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க கமல் ஒப்பந்தமாகியிருக்கிறார். 'தலைவன் இருக்கிறான்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம், தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. தமிழில் கமல், இந்தியில் ரிஷிகபூர், தெலுங்கில் வெங்கடேஷ், மலையாளத்தில் மோகன்லால் நடிக்கின்றனர். கமலுக்கு ஜோடி த்ரிஷா. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் படமாக்கப்படவுள்ளன. ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாம் இது.

அரவிந்த்

© TamilOnline.com