கார்த்தி நடிக்கும் பையா
'பருத்தி வீரனில்' தனி முத்திரை பதித்த சிவகுமாரின் மகன் கார்த்திக்கு அதன்பிறகு தமிழில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அவர் நடித்து செல்வராகவன் இயக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் இன்னமும் முடிவடையவில்லை. இந்நிலையில் பிரபல இயக்குநர் லிங்குசாமி, தாம் தயாரிக்கும் புதிய படத்திற்கு கார்த்தியை நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். உடன் நடிப்பவர் நயன்தாரா. படத்திற்கு 'பையா' என பெயரிட்டுள்ளனர். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது.

அரவிந்த்

© TamilOnline.com