விவேக்கின் புதிய படம்
விவேக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'மகனே என் மருமகனே'. இப்படத்தை ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட் சார்பாக, 'முத்துலட்சுமி மூவிஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. 'வீடு மனைவி மக்கள்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களை இயக்கிய டி.பி. கஜேந்திரன் கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார். அவர் இயக்கும் இருபத்தி நான்காவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் விவேக்கிற்கு இணையான வேடத்தில் மற்றொரு கதாநாயகனாக மிதுன் நடிக்கிறார்.

கிராமப்புற மைனராக நடிக்கும் விவேக்கிற்கு ஜோடி யாமினி சர்மா. மிதுனுக்கு ஜோடி தேன்மொழி என்ற புதுமுகம். இவர்களுடன் நாசர், சரண்யா, லிவிங்ஸ்டன், மீனா, தம்பி ராமையா, பரவை முனியம்மா, லொள்ளு மனோகர், லக்ஷா ஆகியோரும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் இயக்குனர் டி.பி. கஜேந்திரனும் நடிக்க இருக்கிறார். இது ஒரு நகைச்சுவைப் படம். இதில் குஷ்பு சொந்தக் குரலில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com