சுந்தர் சி. நடிக்கும் ஐந்தாம் படை
சுந்தர் சி. இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டதாக உருவாகிறது 'ஐந்தாம் படை'. அவருக்கு ஜோடி அதிதி. முக்கியமான வேடங்களில் சிம்ரனும், தேவயானியும் நடிக்கின்றனர். 'ஓரம்போ ஓரம்போ, ருக்குமணி வண்டி வருது....' என்ற பழைய ஹிட் பாடல் இந்தப் படத்திற்காக ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இசை: இமான். இயக்கம்: பத்ரி. பாடல்கள்: கங்கை அமரன். விரைவில் திரைக்கு வருகிறது 'ஐந்தாம் படை'.

அரவிந்த்

© TamilOnline.com