கலைஞர்
தமிழக முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாக இருக்கிறது. படத்துக்குக் ‘கலைஞர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் கருணாநிதியின் ஒவ்வொரு வயதுகாலக் கட்டத்துக்கேற்றவாறு ஏழு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இதர முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக கூத்துப்பட்டறை மற்றும் நாடகத்துறையிலிருந்து கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். படத்தை உண்ணாமலை கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.கணேசன் தயாரிக்கிறார். 'பொன்மேகலை' என்ற திரைப்படத்தை இயக்கிய சக்தி.ஜி திரைக்கதையமைத்து இயக்குகிறார். இசை: இளையராஜா. ஒளிப்பதிவு: கே.வி.சுரேஷ். கலைஞர் பிறந்து வளர்ந்த திருக்குவளையில் தொடங்கி சென்னைவரை அவர் கால்பதித்த அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com