குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்
சென்னை 600028 படத்துக்குப் பிறகு எஸ்.பி.பி. சரண் தயாரிக்கும் புதிய படம் 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்'. இதில் இயக்குநர் சேரனின் உதவியாளர் ராமகிருஷ்ணன் கதாநாயகன். இயக்குநர் தருண்கோபியிடம் உதவியாளராகப் பணியாற்றிய தருண் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மருத்துவக் கல்லூரி மாணவி தர்ஷணா கதாநாயகி. ராஜமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இசை: யுவன்ஷங்கர்ராஜா. ஒளிப்பதிவு: சித்தார்த். அழுக்கான மனிதர்களிடையே பூக்கும் அழகான காதலை மிக யதார்த்தமாகக் காட்டியிருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர். மீனவ கிராமப் பின்னணியைக் கதைக்களமாகக் கொண்டு வளர்கிறது படம்.

அரவிந்த்

© TamilOnline.com