ஆகாஷ் இயக்கத்தில் 'மதன்'!
நடிகர் ஆகாஷ் 'ஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ்' படநிறுவனத்தின் சார்பாக சேது கந்தசாமி தயாரித்து அளிக்கும் 'மதன்' என்ற புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

நாயகன் ஆகாஷ். இவருடன் மூன்று இளம் கதாநாயகிகள் நடிக்கவிருக்கின்றனர். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவை கவனிக்க, இசையை பாபி கவனிக்கிறார்.

இப்படத்திற்காக மூன்று பாடல் காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளன. பாடல்களை கபிலன், சிநேகன், விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர்.

நடிப்பு, இயக்கம் மட்டுமல்லாமல் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஆகியவற்றையும் கவனிக்கிறார் ஆகாஷ்!

கேடிஸ்ரீ

© TamilOnline.com