மாதா அமிர்தானந்தமயி கலிபோர்னியா, மிச்சிகன் வருகை
2008 நவம்பர் 23 முதல், டிசம்பர் 4 வரை, 'அம்மா' ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் கலிபோர்னியா விரிகுடாப் பகுதிக்கும், மிச்சிகனில் உள்ள டியர்பார்னுக்கும் வருகை தர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்றும் அழைக்கிறார்கள்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ரமோன், கலிபோர்னியா: நவ. 23 - நவ. 28
டியர்பார்ன், மிசிகன்: நவ. 30 - டிச. 04

இரண்டு இடங்களிலும், இலவச பொது நிகழ்ச்சிகள் மற்றும் ஆன்மீக முகாம்கள் நடைபெறும். பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். ஆன்மீக முகாமில் (retreat) ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.

அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org

மேலும் விபரங்களுக்கு:
www.amma.org
Amma photo copyrighted to
M.A. Center, 2005

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com