லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் ஐயப்ப மண்டல பூஜை
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் உள்ள லிவர்மோர் சிவ-விஷ்ணு கோவிலில் இந்த ஆண்டுக்கான ஐயப்ப மண்டல பூஜை நவம்பர் 15, 2008 (கார்த்திகை 1) அன்று மாலை 5:00 மணிக்குத் தொடங்குகிறது. இங்குள்ள பதினெட்டு படிகள் அமைத்த மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி ஐயப்பனுக்கு பூஜை, அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடபெறுவதோடு, சன்னதியில் பஜனையும் நடைபெறும்.

சபரி மலைக்கு யாத்திரை செல்லவிருக்கும் ஐயப்ப பக்தர்கள் இந்த நன்னாளில் துளசிமணி மாலையணிந்து தமது விரதத்தைத் தொடங்குவார்கள். அதற்குப் பின் ஒவ்வொரு சனிக்கிழமை (நவம்பர் 22, 29; டிசம்பர் 6, 13, 20) மாலையிலும் 6:00 மணிக்கு வாராந்தர பஜனை, தீபாராதனை நடைபெறும்.

டிசம்பர் 24 அன்று மண்டல பூஜை நிறைவு பெறும். அதற்கான விழா மாலை 5:00 மணிக்குத் தொடங்கும். அன்று சங்கல்பம், அபிஷேகம், பூஜை, பஜனை, தீபாராதனை, பிரசாத வினியோகம் ஆகியவை நடை பெறும். பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள ஐயப்ப சமாஜத்தினர் அழைக்கின்றனர்.

மேலும் தகவலுக்குத் தொடர்புகொள்ள:
பிரசாத் ராமகிருஷ்ணன் prasad.ramki@gmail.com - 408.705.8172
ரவி தேவராஜ் ravi.devaraj@gmail.com - 650.302.3612
சுதாகர் தீவி sudhakardeevi@gmail.com -925.518.4521
மின்னஞ்சல் குழு: AyyappaSamaaj@yahoogroups

© TamilOnline.com