அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
பிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்காக ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் 'ஆனந்தம் ஆரம்பம்'. இதில் நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகமாகிறார். புதுமுகம் ஸ்ருதி கதாநாயகி. இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் விஷ்ணுசங்கரன். இவர் சபாபதி, எழில் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ஒரு சாதாரண இளைஞன் சாதனையாளனாக மாறுவதைக் கூறுவதுதான் 'ஆனந்தம் ஆரம்பம்' என்கிறார் இயக்குநர். இசை - சுந்தர் சி.பாபு. பாடல்கள் - யுகபாரதி, வி.இளங்கோவன், கவிவர்மன். ஒளிப்பதிவு - தினேஷ்குமார். படத்தொகுப்பு - எம்.எஸ். சூர்யா. தயாரிப்பு - ராமநாதன்.

அரவிந்த்

© TamilOnline.com