ரசிக்கும் சீமானே
தனது இளமைதுள்ளும் நடிப்பால் ரசிகைகளை அதிகம் கவர்ந்தவர் ஸ்ரீகாந்த். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர், அடுத்து நடிக்கும் படம் 'ரசிக்கும் சீமானே'. ஸ்ரீகாந்துக்கு ஜோடி நவ்யா நாயர். காதல் த்ரில்லரான இதன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.கே. வித்யாதரன். இவர் 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்' படத்தின் வசனகர்த்தா. முதன்முறையாக இந்தப் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில், அதாவது பிளாக்மெயிலராக நடிக்கிறாராம் ஸ்ரீகாந்த்.

அரவிந்த்

© TamilOnline.com