'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரஜினி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் முரட்டுக்காளை. ஏவி.எம்மிற்கும் திருப்புமுனையாக அமைந்த இந்தப் படம் தற்போது மீண்டும் படமாக்கப்பட இருக்கிறது. தயாரிப்பாளர் அமிர்தத்தின் மகன் குணாநிதி இப்படத்தின் உரிமையை முறைப்படி ஏவி.எம்மிடமிருந்து வாங்கியிருக்கிறார். ஹீரோ சுந்தர் சி. மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. எம்.ஜி.ஆரின் 'உலகம் சுற்றும் வாலிபன்' பட ரீ-மேக்கில் நடிக்க இருக்கும் சுந்தர் சி., அதை முடித்துவிட்டு ‘முரட்டுக்காளை'யைத் தொடரவிருக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com