பிரசன்னாவின் நாய்க்குட்டி
அஞ்சாதே படத்தில் வித்தியாசமான வேடத்தை ஏற்று நடித்து, படத்தின் வெற்றிக்கு உதவியவர் பிரசன்னா. இவர் புதிதாக நடிக்க இருக்கும் படம் 'நாய்க்குட்டி'. இந்தப் படத்திலும் பிரசன்னாவுக்கு அதிர்ச்சியூட்டும் வேடம்தானாம். எவர்கிரீன் மூவி இன்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் வி.ஏ. துரை படத்தைத் தயாரிக்கிறார். ஜோடியாக நிகோர் நடிக்கிறார். படத்தில் சென்னைத்தமிழ் பேசி நடிக்கும் பிரசன்னா, அதற்காக குப்பத்துக்குச் சென்று, அங்குள்ள மக்களுடன் பேசிப் பழகி வருகிறார். இயக்கம் - அறிமுக இயக்குனர் எஸ்.எஸ்.ஜோ.

அரவிந்த்

© TamilOnline.com