விஜயகாந்த்தின் மரியாதை
விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'மரியாதை'. இதில் மீனா, மீரா ஜாஸ்மின், அம்பிகா ஆகியோர் கதாநாயகிகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்தை-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார் விஜய்காந்த். படத்தின் கதை அவரை மிகவும் பாதித்ததால் தனது சொந்தப்படமான 'விருதகிரி' படத்தின் படப்பிடிப்பைக் கூட தள்ளி வைத்திருக்கிறார் அவர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் விக்கிரமன். இந்தப் படத்துக்காக விஜய்காந்துக்கு விருது நிச்சயம் என்கிறார் விக்கிரமன். 'வானத்தைப் போல' படத்தைப் போல இது விஜய்காந்துக்குத் திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா.

அரவிந்த்

© TamilOnline.com