டாக்டரிடம் உண்மையைச் சொல்லுங்கள்
செப்டம்பர் 13, 2008 அன்று செயின்ட் லூயிஸ் FOX TV தொலைக்காட்சியில் டாக்டர் காயத்ரி ராமன் 'மருத்துவரிடம் உண்மையைச் சொல்லவும்' என்ற தலைப்பில் பேசினார். டாக்டர் காயத்ரி ராமன் மிசௌரி பாப்டிஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

உடல்நலம் காப்பதற்காக மருத்துவரைக் கலந்தாலோசிக்கும்போது எதையும் மறைக்காமல் நேர்மையாகக் கேள்விகளுக்குப் பதிலளிப்பதின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார். எப்போதாவது மது அருந்துவதை, உடற்பயிற்சி செய்வதை அல்லது செய்யாமலிருப்பதை, புகை பிடிப்பதை, என்னென்ன மருந்துகள் உட்கொள்கிறீர்கள் என்ற விபரங்களைச் சிறிதும் மறைக்காமல் தெரிவிக்கவும். அப்போதுதான் மருத்துவர் உங்கள் உடல்நலக் கோளாறுகளுக்கான சரியான தீர்வையும் மருந்துகளையும் வழங்க இயலும் என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியை இணையத்தில் காண: www.myfoxstl.com

தகவல்: பகவன்தாஸ்,
செயின்ட் லூயி, மிசௌரி

© TamilOnline.com