சில புதுவகை நொறுக்குத் தீனிகள்
முறுக்கும் தட்டையும் ஒன்றும் புதிதல்ல. ஆனால், பிரெட் மசாலா முறுக்கு, ராகி ஓமப்பொடி புதுசுதானே! வாருங்கள் சில புதுப்புதுத் தின்பண்டங்கள் செய்து பார்க்க...

பிரெட் மசாலா முறுக்கு

தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1/2 கிண்ணம்
அரிசிமாவு - 1/4 கிண்ணம்
பிரெட் துண்டுகள் - 5
நெய் - 1 தேக்கரண்டி
மிளகாய்ப் பொடி - 1/8 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு ஒவ்வொன்றாகத் தண்ணிரில் அழுத்தி, உடனே வெளியில் எடுத்துப் பிழிந்து கொள்ளவும்.

இதை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். மீதி உள்ள எல்லாப் பொருட்களையும் இத்துடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் ரிப்பன் வில்லையைப் போட்டு, மிதமாகக் காய்ந்த எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாகப் பிழிந்து, இரு பக்கமும் பொன்னிறமாக வெந்த பின் எடுத்து வடிய வைக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com