அர்ஜுன் நடிக்கும் துரை
ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம் துரை. இதை பிரபல கமர்ஷியல் பட இயக்குநரான ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். கதாநாயகிகளாக கீரத், கஜாலா ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல இந்திப்பட நடிகர் நமித் வில்லனாக நடிக்கிறார். அரசியல் கட்சித் தொண்டரான அர்ஜுன் அநியாயத்துக்கு எதிராகப் போராடுவது தான் கதையாம். சுமா என்ற மும்பை டான்சர் மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். வின்சென்ட் அசோகன், ஓ.கே.சுந்தர், எஸ்.என். லட்சுமி உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை டி.இமான். படத்தை பி.எல். தேனப்பனின் ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஹைதராபாத், சென்னை, பொள்ளாச்சி, சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அர்ஜூன்-விவேக் காம்பினேஷன் காமெடியும், 600 அடி நீள சண்டைக் காட்சியும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்கிறார் இயக்குநர்.' அக்னிநட்சத்திரம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராஜா...' பாடல் இப்படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com